T24 Tamil Media
இந்தியா இலங்கை

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது! சேதுபதி – முரளிக்கு வழங்கிய பதில்.

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதிக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் இன்று முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்தார். அவர் தனது ட்விட்டரில், “என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலை சிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலைப்பயணத்தில் வரும் காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

முரளிதரனின் இந்த ட்வீட்-க்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி “நன்றி.. வணக்கம்” எனக் குறிப்பிட்டார். இதனால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்து விட்டதாக தகவல் வெளியானது.

இதனிடையே சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வந்த நடிகர் விஜய் சேதுபதி, முதல்வரின் தாயார் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் முதல்வர் பழனிசாமி தாயார் மறைவுக்கு அவரிடம் ஆறுதல் தெரிவித்து புறப்பட்டார்.

இதன்போது முதல்வர் வீட்டு வாசலில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, நன்றி வணக்கம் என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது என்று தான் பொருள்” என்றவர்,800 திரைப்படம் குறித்து இனி பேசுவதற்கு எதுவுமில்லை” என்றார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more