தமிழகத்தில் திங்கள்கிழமை 20/04/2020 முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியார்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோரோனா வைரஸ் தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம், காவல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குடிநீர் வழங்கல், உணவுப் பொருள் வழங்கல் ஆகிய முக்கிய துறைகளைச் சோர்ந்த ஊழியார்கள் மட்டுமே கடந்த மார்ச் 24 முதல் பணிக்கு வருகின்றனார். பிற துறை ஊழியார்கள்: அத்தியாவசியத் துறைகள் அல்லாத பிற துறைகளைச் சோர்ந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஊழியார்களும் பணிக்கு வரவில்லை.
திங்கள்கிழமை 20/04/2020 அலுவலகங்களுக்கு வரும் ஊழியார்கள் அனைவரும் சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து அலுவலர்களும், பணியாளார்களும் முகக்கவசம் அணிந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அடிக்கடி அலுவலகத்தில் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். கொவைட் 19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாது பின்பற்றி பணிபுரிய வேண்டும் என்று அரசுத் துறைகளின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணிக்கு வருவது எப்படி என்று அரசு ஊழியா்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.
