தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 2,08,139 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 1.94 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு
கொரோன வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் அமுல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும்,பொது இடங்களுக்கும் வருகிறவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்
ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவர்களின் 179,827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவார்களிடமிருந்து ரூ.8,923,644 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குக்குப் பின்னரும் கொரோன வைரஸ் பாதிக்கப்பட்டவார்களின் எண்ணிக்கை உயார்ந்து வருவதால், ஊரடங்கை மீறுபவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவார்களது வாகனங்களைப் பறிமுதல் செய்யவும் காவல்துறையினரால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.