T24 Tamil Media
இந்தியா

தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

தமிழகத்தில் இன்று 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 1520 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுகே காரணமாக 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  • தமிழகத்தில் நேற்றுவரை தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 7ஆயிரத்து 193 பேர்.
  • 28 நாட்கள் தனிமைப்படுத்துதலை பூர்த்தி செய்தவர்கள் 87ஆயிரத்து159 பேர்.
  • தற்போது தனிமையில் இருப்பவர்கள் 20 ஆயிரத்து 619 பேர்.
  • அரசு கண்காணிப்பில் இருப்பவர்கள் 145 பேர்.
  • மொத்தம் எடுக்கப்பட்ட சாம்பிள் 46975.
  • சாம்பிள் எடுக்கப்பட்ட தனி நபர்கள் எண்ணிக்கை 41710.
  • இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 6109 .
  • இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 43.
  • நேற்று வரை தொற்று உறுதியானவர்கள் மொத்த எண்ணிக்கை 1477.
  • இன்றைய மொத்த எண்ணிக்கை 1520.
  • இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 46 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 457 பேர்.
  • இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2. மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் சுகாதாரப் பணியாளருக்கு கரோனா தொற்று வந்துள்ளது, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினருடன் இருந்த 3 பேருக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. எம்.பி.க்கு நெகட்டிவ். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 6000 சோதனைக்கு மேல் செய்யக்கூடிய அளவுக்கு நமது பணி அதிகரித்துள்ளது. ரேபிட் டெஸ்ட் தொடர்ச்சியாக அனைவருக்கும் செய்யக்கூடிய ஒன்று. அதில் அதிகம் பாசிட்டிவ் வந்தால் சமுதாயப் பரவல் என்று அர்த்தம். இதுவரை நாம் இரண்டாம் கட்டத்தில்தான் இருக்கிறோம். சமுதாய பரவல் இல்லை”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more