T24 Tamil Media
இந்தியா

டெல்லி துக்ளகாபாத் பகுதியிலுள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் கருகி சாம்பலாகின.

டெல்லி துக்ளகாபாத் பகுதியிலுள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 120 குடிசைகள் கருகி சாம்பலாகின.

தென்கிழக்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. 1.30 மணியளவில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு குடிசையில் பரவிய தீ ஏனைய குடிசைகளுக்கும் பரவிய என குறிப்பிடப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இதனையடுத்து, இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 22 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி 2 மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில் 120 குடிசைகள் முற்றிலும் கருகி சாம்பலாகின. தீ விபத்து உடனடியாக கண்டறியப்பட்டு அனைவரும் குடிசைகளைவிட்டு வெளியேறியதால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

இப்பகுதியில் நடந்த இரண்டாவது தீ விபத்து இதுவாகும். கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் 250 குடிசைகள் எரிந்து சாம்பலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more