அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் தெரிவனார். மேலும், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவர்களுக்கு பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோ பைடனுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “அற்புதமான உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துகள். அமெரிக்க துணை அதிபராக நீங்கள் வழங்கிய பங்களிப்பால் இந்திய, அமெரிக்க உறவுகள் வலுப்பெற்றது. அந்த உறவுகள் மிகப்பெரிய உச்சத்துக்கு செல்ல உங்களுடன் நெருக்கமாக மீண்டும் பணியாற்றும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸுக்கு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “உங்கள் வெற்றிப்பயணம், திருப்பம் நிறைந்தது. இது உங்களுடைய சித்திகளுக்கு மட்டுமின்றி எல்லா இந்திய-அமெரிக்கர்களுக்கும் மிகச்சிறந்த பெருமை தரும் விஷயமாகும். துடிப்புமிக்க இந்திய, அமெரிக்க தொடர்புகள் உங்களுடைய ஆதரவு மற்றும் தலைமையால் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.