சென்னையில் இதுவரை மொத்தம் 452 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கோடம்பாக்கத்தில் 16 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 133 பேரும், தடையார்ப்பேட்டையில் 59 பேரும், திருவிக நகரில் 55 பேரும், தேனாம்பேட்டையில் 53 பேரும், கோடம்பாக்கத்தில் 52 பேரும், அண்ணாநகரில் 39 பேரும் உள்ளனர். மேலும், திருவொற்றியூரில் 13 பேரும், வளசரவாக்கத்தில் 13 பேரும், அடையாறில் 10 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 8 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும், அம்பத்தூரில் 1 நபரும், மணலியில் 1 நபரும் உள்ளனர்.
சென்னையில் தொற்று பாதித்தவர்களில் ஆண்கள் 65.19% பேரும், பெண்கள் 34.81% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.