இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் நிறுவனங்களால் “தானியங்கி பொறிமுறை” மூலம் முதலீடுகளுக்கு தடை விதிக்கும்வகையில் தனது அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையை சனிக்கிழமை 18/04/2020 அன்று இந்திய அரசு திருத்தியமைத்துள்ளது.
கொரோனா வரசினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பல நிறுவனங்களின் மதிப்பீடு பெருமளவில் சரிந்துள்ளது.
பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து முதலீடுகளுக்கு ஏற்கனவே தடைகள் நடைமுறையில் இருந்த நிலையில் புதிதான மாற்றமானது சந்தர்ப்பவாத சீனா, இந்திய நிறுவனங்களைக் கையகப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைத் தடுக்கும் முயற்சியாகக் கருதப்படுவதாக அதிகாரபூர்வமற்ற அரசுதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தடையானது சீன நாட்டவருக்கும்; ஹாங்காங், சிங்கப்பூர் அல்லது பிற நாடுகளின் வழியாக முதலீடுகளை மேற்கொண்டு, சீன குடிமக்களுக்கு நன்மை பயக்கும் உரிமையை கொண்ட நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
இந்தியாவில் ஏற்படும் பெரும்பாலான அந்நிய நேரடி முதலீடுகள் “தானியங்கி பொறிமுறை” மூலம், இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்த பின்னரே அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும். இனிவரும் காலங்களில் இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் முதலீடுகளானது, முதலீட்டுக்கு முன்னரே இந்திய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும். அதன்மூலம் இந்திய நிறுவனங்களைக் குறைந்தவிலையில் கையகப்படுத்தும் திட்டங்கள் தடுக்கப்படும்.