T24 Tamil Media
இந்தியா

கொரோனா வைரஸ் முடக்கம் : நேரலையில் திருமணத்தினைப் பகிர்ந்த கோவை மணமக்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடுமுழைவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், தமது திருமணத்தை முகநூல் நேரலையில் உறவினர்களுக்குப் பகிர்ந்துள்ளனர் கோவையைச் சேர்ந்த புதுமணத் தம்பதிகள்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு பல்வேறு தரப்பினரையும் முடக்கியுள்ளது. கோவை துடியலூர் அருகேயுள்ள குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் பாபு மற்றும் பிரவீனா ஆகிய இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், விக்னேஷ் பாபு வித்தியாசமான முறையில் தனது திருமண பத்திரிகையை வெளியிட்டார். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. ”ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள காரணத்தினால் எளிய முறையில் வீட்டிலேயே திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு நிலைமை சீரடைந்த பிறகு வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கின்றோம். திருமணத்தை நேரடியாக பேஸ்புக் லைவ் மற்றும் யூடியூப்பில் காணுங்கள். மணமக்களை ஆசிர்வதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்… #covid19 #staysafe #stayhome.”

இதன்படி குருடம்பாளையம் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விக்னேஷ்பாபு – பிரவீனா திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. குறைவான ஆட்கள் கலந்து கொண்ட நிலையில், முகநூல் நேரலையில் திருமணத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குப் பகிர்ந்தனர். அவர்கள் முகநூலில் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதையடுத்து 2000 பேருக்கு தயார் செய்யப்பட்ட உணவை, குருடம்பாளையம் ஊராட்சியோடு இணைந்து உணவின்றி தவிப்பவர்களுக்கு வழங்கினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினருக்கு புதுமணத் தம்பதிகள் நேரடியாக சென்று உணவு வழங்கினர்.

ஆடம்பரமாக மண்டபத்தில் நடைபெற இருந்த திருமணம் கொரோனா காரணமாக எளிமையாக நடந்ததாகவும், ஊரடங்கு முடிந்த பின்னர் திருமண வரவேற்பு நடத்த உள்ளதாகவும் புதுமணத் தம்பதிகள் தெரிவித்தனர்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more