T24 Tamil Media
இந்தியா

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

முன்னாள் தமிழக முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இதற்கமைய சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியதாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

மேலும் கருணாநிதியின் 97ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் ஒரு ஜோடிக்கு மு.க.ஸ்டாலின் இலவச திருமணம் செய்து வைத்தார்.

கொரோனா தொற்று பரவலால் கருணாநிதியின் பிறந்தநாளுக்காக எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மாறாக சமூக ஒழுங்கினைக் கடைப்பிடித்து, அவரவர் இடங்களில் தேவையானவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்து கருணாநிதியின் புகழைப் போற்ற வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more