T24 Tamil Media
இந்தியா

ஊரடங்கை மீறினால் 144 தடை உத்தரவு மேலும் கடுமையாக்கப்படும் – தமிழக முதல்வர்

ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால், 144 தடை உத்தரவு மேலும் கடுமையாக்கப்படும் என தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை உரையாற்றும்போது “பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ளது. தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளி மாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு , மருத்துவ வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. தமிழகத்தில் மூன்று முகாம்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன.

மொத்தமாக வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை 1,18,336. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 3409 பேர், உணவகங்களில் 7,801 பேர், பண்ணைகளில் 4,953 பேர் என ஒட்டுமொத்தமாக 1,34,569 வெளி மாநிலத் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் சென்றவர்கள் எண்ணிக்கை 7, 198. அவர்களை பாதுகாக்க அந்தந்த மாநிலங்களுடன் தொடர்பு கொண்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தங்கள் மாநிலங்களில் இருக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று தமிழக அரசு இந்த உதவிகளை செய்து கொடுத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வருவதற்கு எந்த தடையும் இல்லை. அதே நேரத்தில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். சிலர் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். நோயின் தாக்கத்தை மக்கள் உணர வேண்டும். இதுவரை கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

ஊரடங்கை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்த அல்ல. மக்களைக் காக்கவே. ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். ஒவ்வொரு உயிரும் அரசு முக்கியம். இதுவரை மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அரசு, ஊரடங்கை மீறும்பட்சத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும். ஊரடங்கை தேவையில்லாமல் மீறினால், 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும்.

கொரோனாவால் விடுப்பு எடுத்ததற்காக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது” என்று தெரிவித்தார்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more