இலங்கையில் நிர்க்கதியாகியுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்வதற்காக மேலும் இரண்டு இந்திய விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளன.
வந்தே பாரத் மிஷன் 3 என்ற திட்டத்தின் கீழ் இந்த விமானங்கள் இரண்டும் இலங்கைக்கு வரவுள்ளன.
இதன்படி ஜூன் 15 மற்றும் ஜூன் 22ஆம் திகதிகளில் இந்த விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளன.
கொழும்பு – பெங்களூர், கொழும்பு – புதுடில்லி லக்னோவ் விமான ஓடுபாதைகளூடாக இந்த விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இது குறித்து இந்திய தூதரகத்தின் இணயத் தளத்தில் மேலதிக விவரங்கள் பதிவிடபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.