இலங்கைக்கு கடத்துவதற்கு தயாராக இருந்த 2 கோடி பெறுமதியான போதைப்பொருட்களை தமிழக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இராமநாதபுரத்தின் திருவாடானை பகுதியிலுள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இராமநாதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் மான் கொம்பும் சிங்கப் பற்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.