T24 Tamil Media
இந்தியா

இன்ஸ்டாகிராமில் பழக்கம்! 3 நாட்களாக பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான ஆண் நண்பரை சந்திக்க சென்ற இளம்பெண்ணை அந்த நபர் கிணற்றில் தள்ளிவிட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், ஆதர்ஷ் என்ற 22 வயது நபரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

ஆதர்ஷின் அழைப்பை ஏற்ற அந்த பெண் அவரை சந்திக்க பெங்களூரு அருகிலுள்ள தேவனஹள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளார். சம்பவத்தன்று மாலை 5.30 மணியளவில் தேவனஹள்ளியில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு ஏரங்கநாதபுரம் கிராமத்திலுள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றார் ஆதர்ஷ்.

பண்ணை வீட்டிற்கு சென்றபின் ஆதர்ஷ் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார், ஆனால் அவர் அதனை நிராகரித்ததால், அவர் அந்தப் பெண்ணை கிணற்றுக்குள் தள்ளிவிட்டு இரவு 7:30 மணியளவில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அவர் கிணற்றுக்குள் த ள்ளப்பட்ட மூன்று நாட்களுக்கு பின் கிணற்றில் இருந்து அப்பகுதி கிராம மக்களால் கண்டறியப்பட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பிறகு கிரேன் மூலம் அந்த பெண்ணை கிணற்றிலிருந்து மீட்டுள்ளனர். உணவின்றி, உடைந்த கையுடன் 60 அடி ஆழ கிணற்றினுள் மூன்று நாட்கள் சிக்கித்தவித்த அவரை சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் கொலை முயற்சியில் ஈ டுபட்டதாக இளைஞர் ஆதர்ஷை கைது செய்துள்ளனர்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – வெளியான புதிய அறிவிப்பு.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more