இந்தியாவில் கொரோனா வைரசின் தொற்று தீவிரமடைந்து வருவதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தியாவில் 14/04/2020 அன்று ஒரே நாளில் புதிதாக 1463 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை நாடு முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 10,000 ஜக் கடந்துள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன்முதலாகத் தொற்றினை ஏற்படுத்தியன் பின்னதாக தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு ழுமுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் 14/04/2020 அன்று ஒரே நாளில் மட்டும் 1463 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 14/04/2020 அன்று 29 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 353 ஆக அதிகரித்துள்ளது.