இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய நிலைவரம் தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் புதிதாக 9,887 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 294 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246,622 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,946 ஆகவும் உயர்வடைந்துள்ளது.
மேலும் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 073 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 942 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா உலகளவில் 6ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.