இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தில் கொரோனானாத் தொற்றால் 84 வயதான முதியவர் ஒருவர் உயிரிந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரியைச் சேர்ந்த 84 வயதான முதியவர் ஒருவருக்குத் தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி யானது.
இதையடுத்து அவர் தஞ்சை அரச மருத் துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 104 பேருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது 85 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தஞ்சையில் முதல் கொரோனா இறப்புப் பதிவாகியுள்ளது.