கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி 6 வது இடத்தை எட்டியுள்ளது இந்தியா.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் என்பன அதிகரித்தவண்ணம் உள்ளன.
ஆனால். ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று காலை இந்திய சுகா தாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் 2இலட்சத்து 36ஆயிரத்து பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். கொரோனாவைரசால் உயி ரிழந்தோர் எண்ணிக்கை 6ஆயிரத்து ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை ஒரு லட்சத்து 14ஆயிரத்த 73 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள னர். ஒரு லட்சத்து 15ஆயிரத்த 942 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இதன்மூலம் கொரோனாவைரசால் பாதிக்கப்பட்ட நாடு களில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி, 6வது இடத்தில் இந்தியா உள்ளது.