அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது உலக ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் செய்தியை வழங்க சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடர் மீது இந்தியக் கொடி ஒளிரவிடப்பட்டது.

இந்த இருண்ட காலத்தில் உலகெங்கிலும் நம்பிக்கையை பரப்புவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற சுவிஸ் ஒளி கலைஞர் ஜெர்ரி ஹோஃப்ஸ்டெட்டர் (Gerry Hofstetter) 14,690 அடி உயரமுள்ள மேட்டர்ஹார்ன் (Matterhorn) மலையின் உச்சியில் நாட்டுக் கொடிகளின் கண்கவர் காட்சிகளை ஒளிரச் செய்து வருகிறார்.
மார்ச் 24 முதல் பல்வேறு நாடுகளின் வெவ்வேறு கொடிகளின் இந்த ஒளிக் காட்சிகளை ஹோஃப்ஸ்டெட்டர் செய்து வருகிறார். சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி மற்றும் சுவிஸ் பிராந்தியமான டிசினோவின் கொடிகளும் புதன்கிழமை இரவு மலையில் ஒளிபரப்பப்பட்டன.
ஏறக்குறைய 800 மீட்டர் உயரமுள்ள மேட்டர்ஹார்ன் மலையில் உள்ள இந்தியக் கொடியின் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்ட இந்திய வெளியுறவு சேவை அதிகாரி குர்லீன் கவுர் (Gurleen Kaur ) ட்விட்டரில் , “இமயமலையில் இருந்து ஆல்ப்ஸ் வரை நட்பு. நன்றி” எனப் பகிர்ந்துள்ளார்.
