அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிஸனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இணைய வழி சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இரண்டு நாடுகளும் கொரோனா தொற்றுக்காலத்தில் முகங்கொடுத்த சவால்கள் மற்றும் அனுபவங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசவுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பாதுகாப்பு, தொழில்நுட்பம், கடற்பாதுகாப்பு ஆகிய துறைகளிலுள்ள புதிய வாய்ப்புக்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் பேசுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தனது மதிய உணவுக்கு மாங்காய் சட்னியுடன் சமோசாக்களை தயாரித்திருந்த ஸ்கொட் மொறிஸன் ‘ScoMosas’ என அதை அழைத்து, இந்தியப்பிரதமர் மோடியுடன் அவற்றை பகிர்ந்துகொள்ளமுடியாதமை கவலையளிப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள மோடி, கொரோனா அச்சம் நீங்கிய பின்னர் மொறிஸனை சந்திக்கும்போது அவரோடு சமோசாவை பகிர்ந்துகொள்ள ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.