அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்கலில் ஈடுபட்டாலோ தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா நிவாரண பொருட்கள் வழங்கும் விழா திருவாரூரில் நடைபெற்றது.
நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மே மாதத்திற்கான அரிசி, பருப்பு உள்ளிட்ட விலையில்லா ரேஷன் பொருட்கள், டோக்கன் முறையில் வழங்கப்படும் என தெரிவித்தார். விவசாய பணிகளில் ஈடுபடுவோருக்கு எவ்வித பிரச்னையும் கிடையாது எனவும், அரசின் அங்கீகார கடிதத்துடன் அவர்கள் பணிக்கு செல்லலாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்தியாவசிய பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்கலில் ஈடுபட்டாலோ தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் அமைச்சர் காமராஜ் எச்சரித்துள்ளார்