T24 Tamil Media
இந்தியா

அதிகூடிய இராணுவ செலவினங்களை செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதன்முறையாக 3ஆம் இடம்

உலகின் அதிகூடிய இராணுவ செலவினங்களை செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதன்முறையாக 3ஆம் இடத்தினைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில், இந்திய பாதுகாப்புச் செலவுத்தொகையின் 4 மடங்கு அதிகமாக செலவுசெய்யும் நாடான சீனாவும்,
முதலாவது இடத்தில் 10 மடங்கு அதிகமாக செலவுசெய்யும் அமெரிக்காவும் இடம்பெற்றுள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) (Stockholm International Peace Research Institute) திங்கள்கிழமை அதிகாலை வெளியிட்ட தகவல்களுக்கு அமைய, 2019 இல் மொத்த உலகளாவிய இராணுவச் செலவு 1,917 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, 2018 ஐ விட 3.6% அதிகரித்துள்ளது.

ஐந்து பெரிய செலவினங்கள் அமெரிக்கா (732 பில்லியன் டாலர்), சீனா (261 பில்லியன் டாலர்), இந்தியா (71.1 பில்லியன் டாலர்), ரஷ்யா (65.1 பில்லியன் டாலர்) மற்றும் சவுதி அரேபியா (61.9 பில்லியன் டாலர்) ஆகியவையாகும், இவை உலக இராணுவ செலவினங்களில் 62% ஆகும். “இரண்டு ஆசிய நாடுகள் முதல் மூன்று இராணுவ செலவினர்களில் இடம்பெற்றுள்ளது இது முதல் முறையாகும்” என்று SIPRI தெரிவித்துள்ளது

இந்தியாவின் வருடாந்திர இராணுவச் செலவில், 3.3 மில்லியன் ஓய்வு பெற்ற வீரர்கள் மற்றும் பாதுகாப்பு பொதுமக்களுக்கான ஓய்வூதியத் தொகை அடங்கும். உதாரணமாக, 2020-21 பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில், $ 62 பில்லியனில் கிட்டத்தட்ட 18 பில்லியன் அமெரிக்க டொலர்ஸ் மொத்த ஓய்வூதியத் தொகையாகும்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more