T24 Tamil Media
இந்தியா செய்தி

இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் தரையிறங்க தடை – அவுஸ்திரேலியா

இந்தியாவின் தற்போதைய அபாயகரமான கொரோனா நிலைமைகள் காரணமாக, எதிர்வரும் மே 15 வரை இந்தியாவிலிருந்து வருகை தரும் அனைத்து திட்டமிடப்பட்ட பயணிகள் விமான சேவைகளையும் அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது.

இதன்பிரகாரம், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மோரிசன் செவ்வாய்க்கிழமை, இந்தியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தரும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேற்படி அறிவிப்பினால் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் – உயர்மட்ட கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். எவ்வாறெனினும் இந்த முடிவு மே 15 க்கு முன் பரிசீலிக்கப்படும் என்றும் மோரிசன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றுகள் பெருமளவில் உயர்ந்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

ஹட்டனில் கோர விபத்து- இளைஞர் பலி

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more