நாட்டில் வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் வட மத்திய கடற்பரப்புக்களில் கடந்த இரண்டு வாரங்களில் முன்னெடுத்த கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டிருந்த 10,219 கடலட்டைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதில் வலைப்பாடு மற்றும் இரணைத்தீவு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது 6,878 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சம்பவம் தொடர்பில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 11 டிங்கி படகுகளும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அரிப்பு, கொண்டச்சிகுடா, கற்பிட்டி, அல்லைப்பிட்டி மற்றும் சல்லிமுனை ஆகிய கடற்பரப்புக்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 3,341 கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் போது 22 சந்தேகநபர்களும், 7 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.