T24 Tamil Media
இலங்கை ஐரோப்பா செய்தி

மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் சமர்ப்பிக்கப்படுமென பிரிட்டன் உறுதி

46 வது மனித உரிமைகள் மாநாடு ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றை சமர்ப்பிக்கப்படுமென்பதை பிரிட்டன் உறுதி செய்துள்ளது.

ஜெனிவாவிற்கான பிரிட்டன் தூதுவரும் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுமாகிய ஜூலியன் பிரத்வைட் மனித உரிமை பேரவைக்கு நேற்று(8) இதனை அறிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

22ம் திகதி முதல் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வு குறித்த திட்டங்களை உறுதிசெய்வதற்காக மனித உரிமை பேரவையின் கூட்டம் நேற்று இடம்பெற்றவேளை பிரிட்டன் தனது தீர்மானத்தை சமர்ப்பிக்கவுள்ளமை உறுதியாகியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என பிரத்வைட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தின் தொடர்ச்சியான தீர்மானமாக இது காணப்படும். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக புதிய தீர்மானம் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more