ஈராண்டுகளுக்கு முன்பதாக பெரும் நாசத்தை விளைவித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறாத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிற்கான உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.