T24 Tamil Media
ஐரோப்பா செய்தி

ஈழத்தமிழரிற்காய் பிரான்ஸ் வாழ் தமிழர்களின் எழுச்சி போராட்டம்

ஈழத்தமிழர்களுக்கான நீதி வேண்டிய போரட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றம் முன்பாக இடம்பெற்றது.

ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை சுய கௌரவத்துடன் தங்களது பிரதேசத்தில் தங்களை தாங்களே ஆழ வேண்டும் என்ற கொள்கையுடன் இன்று பல நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் அரசாங்கத்திற்கு தங்களது பிரச்சனைகளை பல போராட்ட வடிவங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

இந்தவகையில், ஸ்ரீலங்கா அரசின் தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா கூட்டத்தொடரிற்கு பிரான்ஸ் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இடம்பெற்றது.

இன்று திங்கட்கிழமை பிரான்ஸ் வாழ்தமிழ் மக்கள் பேரெழுச்சியாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் முன்பாக ஒன்று திரண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தார்கள். ஸ்ரீலங்காவில் ஈழத்தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் தீர்வுக்கு, அம்மக்கள் புலம் பெயர்ந்து வாழும் அந்தந்த நாடுகளில் ஆட்சி அதிகாரங்களில் உள்ள அரசுக்கு தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழர் தரப்பு பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

ஹட்டனில் கோர விபத்து- இளைஞர் பலி

T24 News Desk 2

ஹட்டனில் கோர விபத்து – ஸ்தலத்தில் ஒருவர் பலி

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more