T24 Tamil Media
Fact Check

Fake News : “கொரோனா வைரஸ் சேதங்களுக்காக ஜெர்மனி 130 பில்லியன் டாலர் சீனாவிடம் கோரிக்கை”

பிரசுரிக்கப்பட்ட செய்தி

கொரோனா வைரஸ் சேதங்களுக்கா ஜெர்மனி சீனாவுக்கு 130 பில்லியன் டாலர் மசோதாவை அனுப்பியுள்ளது.”
“Germany sends China £130billion bill for ‘coronavirus damages’

செய்தியின் நிலை : தவறான செய்தி

பின்னணி : டெய்லி எக்ஸ்பிரஸ் (Daily Express) இணையதளத்தில் “கொரோனா வைரஸ் சேதங்களுக்காக ஜெர்மனி 130 பில்லியன் பவுண்ட்ஸ் மசோதாவை சீனாவிற்கு அனுப்பியுள்ளது” என்னும் பதிவொன்று இடப்பட்டது. அதில், ஜேர்மன் அரசாங்கம் இந்த மசோதாவை அனுப்பியதாகக் கூறப்பட்டது. ஜெர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கலின் புகைப்படத்தினையும் அதில் பதிவேற்றம்செய்து, அவரது பெயரையும் URL இல் உள்ளடக்கியது

உண்மை நிலை: ஜெர்மனியின் மிகப்பெரிய செய்தித்தாள் பில்ட் Bild இந்த மசோதாவை தானாகவே தயாரித்து, இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பொருளாதார சேதங்களை மொத்தம் 149 பில்லியன் ஈரோ (130 பில்லியன் பவுண்ட்ஸ்) என மதிப்பிட்டது. பொருளாதார சேதங்களை வரிசைப்படுத்தி அதனை உத்தியோகப்பூரமான முறையில் தயாரித்தால் எப்பாவரு இருக்கும் என உதாரணத்துக்காக அதனை வடிவமைத்து வெளியிட்டது.

டெய்லி எக்ஸ்பிரஸ் இச்செய்தியின் முதல் பத்தியில் இந்த மசோதா ஒரு “பெரிய செய்தித்தாள்” மூலம் வரையப்பட்டது என்று கூறுகிறது, இருப்பினும் செய்தியின் தலைப்பு, துணை தலைப்பு மற்றும் புகைப்படம் ஆகியவற்றில் ஜேர்மன் அரசாங்கம் இந்த மசோதாவை அனுப்பியதாக பொருள்படும் வண்ணம் அமைத்துள்ளது .

செய்தியை முழுமையாக படித்து ஆராயாமல், உலகின் பல மூலைகளிலும் இச்செய்யதி பரப்பப்பட்டு வருகின்றது,

ஜேர்மனிய வெளியுறவு மந்திரி ஹெய்கோ மாஸ் ( Heiko Mass) சீனாவுக்கு “பில்லிங்” செய்வதா யோசனை “மாயையானது” என்று கூறியுள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more