பிரித்தானியாவின் மிகப்பெரும் மண்டபங்களில் ஒன்றான எக்ஸ்செல் மண்டபமானது (ExCel Center) பிரித்தானிய அரசினால் தற்காலிக வைத்தியசாலையாக மாற்றிஅமைக்கப்பட்டு வருகின்றது.
அதிவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசினால் உலகலாவியரீதியாக தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கைகள் அதி கூடிய அளவில் தேவை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தொற்றின் வீரியம் அதிகரித்துவரும் நிலையில், பிரமாண்டமான எக்ஸ்செல் மண்டபமானது (ExCel Center), 4000 படுக்கைகளைக் கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது.
தற்காலிகமாக அமைக்கப்பட்டு வரும் இவ்வைத்தியசாலைக்கு, புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் நினைவாக என்.எச்.எஸ் நைட்டிங்கேல் (NHS Nightingale) எனப் பெயரிடப்பட்டுள்ளது.