T24 Tamil Media
ஐரோப்பா

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

ஜேர்மனியில் முன்னாள் போராளியொருவர், நீதித்துறை விசாரணையை சந்திக்கவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது, புகலிட விண்ணப்ப கோரிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர்மீது வழக்கு தொடரப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் சுமார் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ளலாமென அஞ்சப்படுகிறது.

தனது பதின்ம வயதிலேயே இலங்கை இராணுவத்தின் ஒரு அணியின் முன்னால் தொலைதூரத்தில் வெடிகுண்டு வெடிக்கவைத்து ஆறு பேரைக் கொன்றதாக வாக்கு மூலமளித்துள்ளதாகவும், சந்தேக நபர் ஜெர்மனியின் டுசெல்டார்ஃப் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்முன்னாள் போராளி 2018 ஆம் ஆண்டில் புகலிட கோரிக்கையை சமர்ப்பித்தார்.

இந்த வழக்கிற்கு உயர் பிராந்திய நீதிமன்றம் எட்டு நாட்கள் ஒதுக்கியுள்ள நிலையில் வழக்கில் அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டால் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் புதிதாக 275 பேருக்கு கொரோனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more