T24 Tamil Media
ஐரோப்பா

வைரஸ் தாக்கத்தில் இருந்து எச்சரிக்கையுடன் சிறிது சிறிதாக வளமை திரும்பும் ஜெர்மனி

கோவிட் -19 தொற்றுநோயால் ஐரோப்பாவின் பெரும்பகுதி பேரழிவிற்கு உட்பட்டுள்ளது. இதுவரை 667,000 பேர்களுக்கு தொற்றுநோய் உறுதிசெய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவிற்கு அடுத்ததாக அதிகம் கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளாகியவர்களைக் கொண்ட நாடாக ஜெர்மனி உள்ளது.

பரவலான நோய்த்தொற்றுக்கள் இருந்தபோதிலும், புதிய நோய்த்தொற்று வீதங்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. தற்போது சடுதியாக நாடு முழுவதும் 100,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் ஏற்பட்டபோதிலும், ஜெர்மனியின் சுகாதார அமைப்பு அதனை ஈடுகொடுத்துள்ளது,

இதனை தனிமைப் படுத்தலினால் பெறப்பட்ட “பலவீனமான இடைநிலை வெற்றியை” என அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் (chancellor Angela Merkel) எச்சரிக்கையுடன் வரவேற்றுள்ளார்.

ஜெர்மனியில் தற்போது கோவிட் -19 தொற்று விகிதம் 0.7 ஆகும். அதாவது, சராசரியாக, பாதிக்கப்பட்ட ஒருவரால் இன்னும் ஒரு நபருக்குக் குறைவாகவே அவரால் நோய் பரப்பப்டுகின்றது.

அந்த தொற்று விகிதம் ஓரளவு 1.1 ஆக உயர்ந்தால் கூட, ஜெர்மனியின் சுகாதார அமைப்பு அக்டோபர் மாதத்தினுள் ஈடுகொடிக்கமுடியாத நிலையினை அடைந்துவிடும். 1.2 எனில் , இது ஜூலை மாதத்திற்குள் ஈடுகொடிக்கமுடியாத நிலையினை அடைந்துவிடும்.

அதேவேளை மே 4 அன்று நாடு முழுவதும் ஆரம்ப அல்லது இடைநிலைப் வகுப்புகளின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு பாடசாலை திறக்கப்படும். சிகையலங்கார நிபுணர்கள் வாடிக்கையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதே நாளில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுவார்கள். ஏப்ரல் 20 முதல் 800 சதுர மீட்டர் அளவுள்ள கடைகள் திறக்கப்படும்.

சமூக தனிமைப் படுத்தல் நடவடிக்கைகள் மே 3 வரை நடைமுறையில் இருக்கும், மற்றும் பெரிம் நிகழ்வுள், திருவிழாக்கள் ஆகஸ்ட் இறுதி வரை தடைசெய்யப்படும்.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more