T24 Tamil Media
ஐரோப்பா

லண்டனில் 45 வயது நோயாளிக்கு கொரோனாவால் ஏற்பட்ட பரிதாப நிலை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, காது கேட்கும் திறன் நிரந்தரமாக போய்விடுவதற்கு வாய்ப்பிருப்பதாக, விஞ்ஞானிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் நுரையீரல், சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கும், ஆண்களின் ஹார்மோன் டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி பாதிக்கும் என கண்டறியப்பட்டிருந்தது. இந்த வரிசையில் தற்போது, கொரோனா தாக்கினால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தரமாக போய்விடுவதற்கு வாய்ப்பு உள்ளது என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லண்டன் பல்லைக்கழக கல்லூரியின் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் நடத்திய ஆய்வில், கொரோனா வைரசால் ஏற்படுகிற பக்க விளைவு, செவித்திறன் இழப்பு என்றும், அதே நேரத்தில் உடனடியாக சரியான ஸ்டீராய்டு சிகிச்சை எடுக்கிறபோது, மீண்டும் கேட்கும் திறனை மீட்டெடுக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது.

பி.எம்.ஜே. கேஸ் ரிப்போர்ட்ஸ் பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. லண்டனில் 45 வயதான ஆஸ்துமா நோயாளி ஒருவருக்கு கொரோனா தாக்கியபோது, பல்வேறு சிக்கல்கள் எழுந்து, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து ரெம்டெசிவிர் மருந்து, ஸ்டீராய்டு மருந்துகள் அளித்தும், ரத்தம் செலுத்தியும் அவர் குணம் அடைந்தார்.

ஆனால் அவரது காதுகள் கேட்கும் திறனை இழந்துள்ளார். இது பற்றி விஞ்ஞானிகள் கூறுகையில், வைரசால் ஏற்படுகிற அழற்சியும், உடலில் ரசாயனங்கள் அதிகரிப்பும் காது கேட்காமல் செய்து விடுகிறது என தெரிவித்தனர்.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more