T24 Tamil Media
ஐரோப்பா

லண்டனில் நடந்த பயங்கர சம்பவம்! 2 பேர் பலி.

லண்டனில் கேஸ் வெடிப்பு காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், கட்டிட இடுபாடுகளுக்கிடையே இருக்கும் சிலரை தீயணைப்பு படையினர் மீட்டு வருகின்றனர்.

பிரித்தானியாவின் மேற்கு லண்டனின் Ealing-ல் இருக்கும் Southall பகுதியில், King வீதியில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 6.20 மணிக்கு பயங்கரமான கேஸ் வெடிப்பு ஏற்பட்டுவிட்டதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

கேஸ் விபத்து நடந்த இடம் ஒரு வணிக வளாகம் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக போன் ஷாப் கடையில் இந்த கேஸ் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக வணிக உரிமையாளர் தாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாகவும், அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், பெரியவர்களையும் குழந்தைகளையும் இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கு சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆறு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்ததாகவும், ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் ஏணியைப் பயன்படுத்தி கட்டிடத்தின் பின்புறத்திலிருந்து மீட்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இரண்டு குழந்தைகள் மற்றும் 14 பெரியவர்கள் சுற்றியுள்ள பகுதியில் இருந்து எந்த ஒரு பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் சம்பவ இடத்தில் இரண்டு பேர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அவர்களைப் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை.
மற்றொரு வணிக உரிமையாளர் தனது கடை அதிர்ந்தது என்று கூறுகிறார், மேலும், சிலருக்கு காயங்கள் இருப்பதாக நாங்கள் கேள்விப்படுகிறோம். இது நம் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

லண்டன் தீயணைப்பு படை சந்தேகத்திற்குரிய வெடிப்பு கடையில், கணிசமான சேதம் மற்றும் கட்டிடம் முழுவதும் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மாலையில் நடவடிக்கைகள் முடிவடைந்து காலையில் மறுதொடக்கம் செய்யப்படும். இந்த வெடிப்பு சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். ,

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more