T24 Tamil Media
ஐரோப்பா

லண்டனில் இலங்கைச் சிறுமிக்கு நடந்த சம்பவம்! பெற்றோரை மிரட்டும் பாடசாலை நிர்வாகம்.

மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் இலங்கை சிறுமியை, அவரது பாடசாலை நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தெற்கு லண்டனில் பெற்றோருடன் குடியிருக்கும் தற்போது 15 வயதான துஷா கமலேஸ்வரன் தொடர்பிலே, செவன் கிங்ஸ் பாடசாலை நிர்வாகம் கடுமையாக நடந்து கொள்வதாக தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி, துஷா கமலேஸ்வரன் பாடசாலைக்கு திரும்புவது மேலும் தாமதமானால், அபராதம் செலுத்த நேரிடும் என அவரது பெற்றோரையும் குறித்த பாடசாலை நிர்வாகம் மிரட்டியுள்ளது.

5 வயதாக இருக்கும் போது துஷா கமலேஸ்வரனுக்கு மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது.

அதில், அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டதுடன், எழுந்து நடக்க முடியாத வகையில் செயலற்ற நிலையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

தற்போது கொரோனா பரவல் காலம் என்பதால், மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க துஷா தமது வீட்டில் இருந்தே கல்வி பயின்று வருகிறார்.

இந்த நிலையில் எசெக்ஸ், இல்ஃபோர்ட் பகுதியில் செயல்பட்டுவரும் செவன் கிங்ஸ் பாடசாலை நிர்வாகம், துஷாவை பாடசாலைக்கு அனுப்பி வைக்க கட்டாயப்படுத்தியுள்ளது.

மேலும் பெற்றோரான சசி(45), மற்றும் ஷாமிலா(43) ஆகியோரையும் அபராதம் விதிப்பதாக கூறி மிரட்டியுள்ளது.

துஷா தொடர்பில் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பி.ஜே.சுரேஷ் அளித்த கடிதத்தை ஏற்க மறுத்த பாடசாலை நிர்வாகம், அந்த கடிதத்தில் போதிய தகவல் இல்லை என நிராகரித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் மருத்துவர் சுரேஷ், பாடசாலை நிர்வாகத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியும், பலனளிக்கவில்லை என துஷாவின் சகோதரர் துசன்(21) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், துஷா திங்களன்று பாடசாலைக்கு திரும்பியுள்ளார், ஆனால் பாதுகாப்பற்றதாகவே உணர்வதாக தெரிவித்துள்ளார்.

துஷாவுக்கு 5 வயதாக இருக்கும் போது, தெற்கு லண்டனில் உள்ள உறவினரின் கடையில், நுழைந்த மூவர் கும்பல் போதைமருந்து கடத்தல் தொடர்பாக அங்கிருந்த ஒருவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்த களேபரத்தில் சிக்கிய துஷாவின் மார்பில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. அதில் இருந்தே துஷா நுரையீரல் மற்றும் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியிலேய் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more