பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு (Boris Johnson) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில் மேலதிக பரிசோதனைக்காக 05/04/2020 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அவரது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட “முன்னெச்சரிக்கை நடவடிக்கை” என்றும் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் மருத்துவரின் அறிவுரைப்படி மருத்துவமனைக்குச் செல்வதாகவும் போரிஸ் ஜொன்சன் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ள பிரதமர் போரிஸ் ஜொன்சன், தொடர்ச்சியாக பிரித்தானிய அரசினை வழிநடத்துவதாகவும், கொரோனா வைரசுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் கொரோனா தொற்றுடன் போராடி மீண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க மக்கள் அனைவரும் போரிஸ் ஜான்சனின் நலனிற்காக இறைவனை வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.