பிரித்தானியாவில் எழுந்துள்ள மருத்துவ முழு பாதுகாப்பு ஆடைகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையினால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு முழு பாதுகாப்பு ஆடைகள் இல்லாமல் சிகிச்சையளிக்கவும், உபகரணங்களை மீண்டும் பயன்படுத்தவும் நிர்ப்பந்திக்கும் சூழல் எழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை 17/04/2020 அன்று (Public Health England ) இங்கிலாந்து-பொது சுகாதார மையமிடம் இருந்து மருத்துவமனைகளுக்கு வழமையான அறிவுறுத்தல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
சில மருத்துவமனைகளின் மருத்துவ அத்தியாவசியப் பொருட்கள் இன்னும் 24 மணி நேரத்தில் தீர்ந்துவிடும் என என்ஹெச்எஸ் (நஹ்ஸ்) வழங்குநர்கள் எச்சரித்தமையால் இம்முடிவு எடுக்கப்படவுள்ளதாக BBC செய்திநிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து முழுவதும் சுகாதார அறக்கட்டளைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கத்தின் தலைவர் கிறிஸ் ஹாப்சன் (Chris Hopson) “முழு திரவ விரட்டும் ஆடைகள் மற்றும் நீண்ட கை கொண்ட உடைகள் இன்னும் 24-48 மணிநேரத்தில் உபயோகமடைந்துவிடும். வாரங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்ட ஆடைகள் தற்போது ஒருசில மாத்திரம் வந்தடைந்துள்ளன.
இது வரை கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நீண்ட கைகொண்ட முழு பாதுகாப்பு ஆடைகள் தேவைப்பட்டது. இப்போது இந்த ஆடைகள் கிடைக்கவில்லை என்றால், ஊழியர்கள் துவைக்கக்கூடிய மருத்துவ ஆடைகள் அல்லது திரவம்-விரட்டும் கருவிகளை அணியலாம் என்று புதிய அறிவுறுத்தல்கள் தெரிவிக்கின்றன.