கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.
ஜெர்மனியில் ஊரடங்கு விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டதால் மீண்டும் நோய் பாதிப்பு அதிகரிக்க துவங்கியது.
அந் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 394 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,83,271 ஆக அதிகரித்தது.
உலகளவில் அதிகமாக நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனி 8 வது இடத்தை பிடித்துள்ளது. நேற்று ஒரு நாளில் 26 பேர் பலியாகினர்.
இதுவரை 8,631 பேர் பலியாகினர். ஜெர்மனியில் கொரோனா சிகிச்சையால் 1.87 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.