இலங்கையில் கொரோனா பாதிப்பினை குறைக்கும் முகமாக பல்வேறு கட்டம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட வண்ணமுள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ரா செனாகா கொவிட் தடுப்பூசிகளை இலங்கை மருந்தக கூட்டுத்தாபனம் கோரியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.