நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வகையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.