T24 Tamil Media
இலங்கை செய்தி

வவுனியாவில் கொரோனாவால் உயிரிந்தோர் தொகை 139 ஆக உயர்வு

வடக்கில் தொடர்ச்சியாக கொரோனா உயிரிழப்புக்கள் அதிகரித்துவரும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் 139 பேர் கொவிட் தொற்று காரணமாக மரணித்துள்ளதுடன், 6,780 பேர் பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் கொவிட் நிலைமைகள் தொடர்பான கலந்துலையாடல் ஒன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் நடைபெற்றது. இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மாவட்டத்தின் கொவிட் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தற்போதைய நிலவரத்தின் படி எமது மாவட்டத்தில் 6,780 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இதுவரைக்கும் 139 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். 973 கொவிட் தொற்றாளர்கள் கொவிட் நிலையங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். வீடுகளில் 1,194 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 49 கொவிட் தொற்றாளர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுனள்ளனர். எனவும் தெரிவித்தார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more