இன்றையதினம்(04) வடக்கு மாகாணத்தில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணத்தில் 12 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 668 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.