வடக்கில் கொரோனா பரவலாக்கம் திடீரென அதிகரித்து வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மாத்திரம் இதுவரை 496 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இவ்வருடத்தில் இதுவரை 668 கொரோனா தொற்றாளர்கள் யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வும், iஇன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்