யாழில் தொர்ச்சியாக கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில், மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 352 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில், 8 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நான்கு பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.