T24 Tamil Media
இலங்கை செய்தி

யாழில் அத்திவாரமிடும் சீனா- இந்தியா கடும் எதிர்ப்பு

மின் திட்டங்களை ஆரம்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள மூன்று தீவுகளை சீன நிறுவனமொன்றுக்கு இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்தவகையில், நெடுந்தீவு, அனலைதீவு, மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் மின் உற்பத்தி திட்டங்களை தொடங்கவே சீன நிறுவனத்திற்கு அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் வழங்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்வதற்கு முன்பே இது தொடர்பில் இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்பு வெளிப்பட்டதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சீன நிறுவனத்திற்கு வழங்கும் நடவடிக்கை தனது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கவலைகளை எழுப்புகிறது என்ற அடிப்படையில் இந்தியாவின் எதிர்ப்பு இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக நெடுந்தீவு இந்திய கடலோர நகரமான ராமேஸ்வரத்திலிருந்து வெறும் 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more