ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று (29) மாலை ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளனர்.
இதன்போது அனைத்து துறைகளிலும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தாம் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், பலதரப்பு அரங்கில் எதிர்கொள்ளும் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கைக்கு உறுதுணையாக நிற்பதாகவும் சீன ஜனாதிபதி இதன்போது வாக்குறுதியளித்துள்ளார்.
இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் முடிவடைந்த 46 ஆவது அமர்வில் இலங்கைக்கு சிறப்பான ஆதரவளித்ததற்காகவும், அதேநேரம் 600,000 சீன கொவிட் தடுப்பூசி டோஸ்களை வழங்கியமைக்காவும் ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.