எதிர்வரும் சிங்கள தமிழ் புதுவருட பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூபா 800 ஐ தாண்டக்கூடும் என முட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக விலங்குத் தீவனத்தின் விலை அதிகரிப்புக் காரணமாக சாதாரண உற்பத்தியாளர்கள் அதிலிருந்து விலகுவதாகவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஐந்து பெரும் கோழி உற்பத்தியாளர்கள் கோழிப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விலைகளை உயர்த்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும், தற்போது சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூபா 550 முதல் 600 ரூபா வரையும் முட்டை ஒன்றின் மொத்த விலை 12 ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன.