T24 Tamil Media
கனடா

இலங்கையில் மீண்டும் மோசமான மனித உரிமை மீறல்!

இலங்கையில் மனித உரிமை மீறல் மீண்டும் மோசமடைகின்றது.என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் கனடாவுக்கான இயக்குநர் பரீடா டெய்வ் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் கனடா தலைமைத்துவம் வழங்குவது மீண்டும் தேவையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

இலங்கையில் போருக்குப் பின்னர் நல்லிணக்கத்தையும் நீதியையும் ஏற்படுத்துவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்த நாடுகளில் ஒன்றாகக் கனடா காணப்பட்டது.

இலங்கையில் மனித உரிமை மீறல் மீண்டும் மோசமடைகின்றது. இந்தநிலையில், இராஜதந்திர நடவடிக்கைகளை எடுப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்துவது குறித்து கனடா கவனம் செலுத்துவது முக்கியமானது.

இலங்கையை அதன் தற்போதைய பாதையில் செல்ல அனுமதிப்பதா அல்லது பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களைப் பாதுகாத்து, சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துவதா என்ற முக்கிய கேள்வியுடன் இம்முறை மனித உரிமைகள் சபையின் அமர்வு ஆரம்பமாகின்றது.

இந்த முயற்சிகளுக்குத் தலைமை தாங்கக்கூடிய இடத்தில் கனடா இருக்கின்றது. சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை தீவிரப்படுத்துவது பயங்கரங்களைத் தடுத்து நிறுத்தும் – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஸ்காட்லின் தொழிற்சாலையில் பணிபுரியும் பருவகால தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

T24 News Desk 4

ஜனவரி 23ஆம் திகதி வரை முடக்கப்படுகிறது ஒன்ராரியோ

T24 News Desk 2

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கனடாவில் குடியுரிமை வழங்க ஆதரவு.

T24 News Desk 2

வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் பலி ஐவர் படுகாயம்.

T24 News Desk 4

ரொறன்ரோ நூலகங்கள் விரைவில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என மேயர் ஜோன் டோரி.

T24 News Desk 4

முதல் முறையாக நபர் ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா உறுதி!

T24 News Desk 4

முதல் தொகுதி தடுப்பூசிகளை பெற்றுள்ளது கனடா- ஜஸ்டின் ட்ரூடோ

T24 News Desk 2

மாயமான இளம்பெண்… வானில் வட்டமிட்ட பறவைகள்: தேடிச் சென்றவர்கள் கண்ட துயர காட்சி.

T24 News Desk 4

மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் – ஜஸ்டின் ட்ரூடோ

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more