கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது கனடா நாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு கட்டாயம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
வருகை தருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்றால் மட்டுமே கனடா வருகை தர அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
கனடா வருகை தந்த பின்பு, 14 நாட்கள் தனிமைப்படுத்தடுவார்கள் எனவும் கனடா அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் கனடாவிலும் ஊடுருவிவிட்ட நிலையில், புதிய கட்டுப்பாடுகளை கனடா அரசு அறிவித்துள்ளது.