T24 Tamil Media
கனடா

கொரோனா வைரஸால் நவீன வழிபறிக் கொள்ளை!

COVID-19 க்கு எதிரான போராட்டத்திற்கான ஐந்து மில்லியன் மருத்துவ முகக்கவசங்களை (Mask ) சீன உற்பத்தி நிறுவனம் ஒன்றிடம் டொராண்டோவைச் சேர்ந்த மருத்துவரும் அவரது நண்பரும் உற்பத்திசெய்ய கடந்த மார்ச் மாதமளவில் ஏற்பாடு செய்த நிலையில், ஐந்து மில்லியன் மருத்துவ முகக்கவசங்கழும் அந்நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டன.

டாக்டர் எலைன் சின் மற்றும் மேன்னி கபூர் ஆகிய இருவரும் கனேடிய மற்றும் மாகாண அரசுகளுடனும் இணைந்து இந்த திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

தயாரிக்கப்பட்ட மருத்துவ முகக்கவசங்ள் கனடா நாட்டிற்கு அனுப்புவதற்கான சேனா விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டு, விமானத்தில் ஏற்றுவதற்கு சற்று முன்பாக அவை மாயமாக மறைந்துவிட்டன.

“எமது பொருட்கள் ஷாங்காய் விமான நிலையத்தில் அனுப்ப தயாராக இருந்தன, விமானத்தில் ஏற்ற அதை டார்மாக்கில் (tarmac) வைத்திருந்தார்கள். ஏனைய நிறுவனங்கள் 10,000 முகமூடி, 5,000 முகமூடிகள் என சிறிது சிறிதாக கொண்டுவருவது பற்றிய செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன், அதே நேரம் எம்மிடம் ஐந்து மில்லியன் முகமூடிகள் விமானத்தில் எறத்தயாராக இருந்தன. பின்னர் சடுதியாக எந்த வித முன் அறிவிப்பும் இன்றி அவை மையமாக மறைந்துவிட்டன. அவற்றினை யார் எம்மைமீறி எடுத்துள்ளனர் என இன்னமும் தெரியவில்லை” என கபூர் கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் வைத்து, டாக்டர் எலைன் சின் மற்றும் மேன்னி கபூர் அவர்களுடன் ஒப்பந்தமான விலையினை விட 4 மடங்குகள் அதிகமாகக்கொடுத்து ஐந்து மில்லியன் மருத்துவ முகக்கவசங்களையும் யாரோ கொள்வனவு செய்து கடைசி நிமிடத்தில் விமானத்தில் ஏற்றது தடுத்து பிறநாட்டொன்றுக்கு அவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

Related posts

ஸ்காட்லின் தொழிற்சாலையில் பணிபுரியும் பருவகால தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

T24 News Desk 4

ஜனவரி 23ஆம் திகதி வரை முடக்கப்படுகிறது ஒன்ராரியோ

T24 News Desk 2

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கனடாவில் குடியுரிமை வழங்க ஆதரவு.

T24 News Desk 2

வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் பலி ஐவர் படுகாயம்.

T24 News Desk 4

ரொறன்ரோ நூலகங்கள் விரைவில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என மேயர் ஜோன் டோரி.

T24 News Desk 4

முதல் முறையாக நபர் ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா உறுதி!

T24 News Desk 4

முதல் தொகுதி தடுப்பூசிகளை பெற்றுள்ளது கனடா- ஜஸ்டின் ட்ரூடோ

T24 News Desk 2

மாயமான இளம்பெண்… வானில் வட்டமிட்ட பறவைகள்: தேடிச் சென்றவர்கள் கண்ட துயர காட்சி.

T24 News Desk 4

மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் – ஜஸ்டின் ட்ரூடோ

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more