T24 Tamil Media
கனடா

கனடா வளமை திரும்ப இன்னும் பல வாரங்கள் ஆகலாம் – ட்ரூடோ

COVID-19 வைரஸ் தொற்றின் வீரியம் குறையும் பட்ச்சத்தில் கனடாவின் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதற்கான கட்டுப்படுத்தப்பட்ட திட்டம் உள்ளதாகவும், வணிக மற்றும் பள்ளி பணிநிறுத்தங்கள் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்க இன்னும் பல வாரங்கள் ஆகும் எனக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது உத்தியோகபூர்வ வாசத்தலத்தின் முன் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்து மாகாணங்களுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றும் கொரோனா வைரஸ் தொற்றின் முதல்கட்டப் பரவலை இன்னும் கனடா தாண்டவில்லை, எனவே மறுஅறிவித்தல் வரை, தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து நோய் எதிர்ப்பு வரையறைகளையும் கடைப்பிடிக்குமாறும் கேட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “உண்மை என்னவென்றால், இது (COVID-19 வைரஸ் தொற்று) இன்னும் பல வாரங்களுக்கு இருக்கும். நமது பொருளாதாரத்தினை தக்கவைப்பது முக்கியம் என்பதனை அறிவேன். அனால் அதை நாம் கட்டம் கட்டங்களாகச் செய்ய வேண்டியிருக்கும். கொரோனா வைரஸ் நோய்க்கெதிரான தடுப்பூசி பயன்பாட்டில் வரும்வரை அனைவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

ஸ்காட்லின் தொழிற்சாலையில் பணிபுரியும் பருவகால தொழிலாளர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று உறுதி.

T24 News Desk 4

ஜனவரி 23ஆம் திகதி வரை முடக்கப்படுகிறது ஒன்ராரியோ

T24 News Desk 2

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கனடாவில் குடியுரிமை வழங்க ஆதரவு.

T24 News Desk 2

வாள்வெட்டுக்கு இலக்காகி இருவர் பலி ஐவர் படுகாயம்.

T24 News Desk 4

ரொறன்ரோ நூலகங்கள் விரைவில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என மேயர் ஜோன் டோரி.

T24 News Desk 4

முதல் முறையாக நபர் ஒருவருக்கு இரண்டு முறை கொரோனா உறுதி!

T24 News Desk 4

முதல் தொகுதி தடுப்பூசிகளை பெற்றுள்ளது கனடா- ஜஸ்டின் ட்ரூடோ

T24 News Desk 2

மாயமான இளம்பெண்… வானில் வட்டமிட்ட பறவைகள்: தேடிச் சென்றவர்கள் கண்ட துயர காட்சி.

T24 News Desk 4

மக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வேன் – ஜஸ்டின் ட்ரூடோ

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more